நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்-
17 Nov,2018
தேர்தலிற்காக இன்னமும் ஒன்றரை வருடங்கள் காத்திருந்திருந்தால் மகிந்த ராஜபக்சவினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரதமராகயிருக்கமுடியும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆனால் நாடு அத்தனை வருடகாலம் பொறுமையாகயிருந்திருக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னமும் ஒன்றரை வருடம் பொறுமையாகயிருந்திருந்தால் மகிந்த ராஜபக்சவினால் பிரதமராகியிருக்க முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவினால் அவ்வாறுபொறுமையாகயிருந்த முடியும் என்பது எனக்கு தெரியும் ஆனால் நாடு ஒன்றரை வருடங்கள் பொறுமையாக காத்திருந்திருக்க கூடிய நிலையில் காணப்பட்டதா என்பதே எனது கேள்வி என அவர் தெரிவித்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதும் பாராளுமன்ற பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மேற்குலக இராஜதந்திரிகள் மகிழ்ச்சியுடன் கைதட்டினர் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.