ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிக்கும் செயற்பாடு முறியடிக்கப்படும்: சந்திரிக்கா
12 Nov,2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒரு சிலர் இணைந்துகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிக்க முயற்சிக்கும் செயற்பாடு விரைவாக முறியடிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டமை தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை சேர்ந்த ஒருசிலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைந்துகொண்டு அம்மக்களின் அபிலாசைகளுக்கு துரோகம் செய்து விட்டனர்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை பாதுகாப்பதாக கூறிய சிலர் அதனை அழிக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்பதை பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நிரூபித்துள்ளனர்.
இவ்வாறு யார் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியிலிருந்து விலகி சென்றாலும் நான் எப்போதும் அக்கட்சியிலிருந்து விலகமாட்டேன்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்” என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.