பைத்தியக் காரன், கொடுங்கோலன் மைத்திரி
10 Nov,2018
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக் காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்,
“மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து அவர் பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத் தான் பெற்றிருக்கிறோம். ஒரு பைத்தியக்காரன்.
மக்களுக்கு எமது பெரும்பான்மையை காண்பிப்போம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
கொடுக்கோலனாக எழுச்சி பெற்றுள்ள சிறிசேனவுக்கு எதிராக நாம் போராடுவோம்.
நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் போராடுவோம். இந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராக, தேர்தலில் போரிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஜனநாயகத்தின் பக்கம் நாங்கள் சரியாக நிற்கிறோம். இந்தப் போரில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.