பூரணை தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்து, சொன்னதைச் செய்தேன்..
09 Nov,2018
ஏற்கனவே தாம் தெரிவித்திருந்தது போல், பூரணை தினத்திற்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டதாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற, கலாநிதி பந்துல குணவர்தன எழுதிய இலங்கை பொருளாதாரத்தின் 3 வருட முன்னேற்றம் மற்றும் பாதிப்பு என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், தனது தீர்மானம் சரியானதா என பாராளுமன்றத்தில் அல்ல, மக்களிடமே வினவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “ஏன் உங்களுக்கு 8 அல்லது 6 மாதங்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை என வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் என்னிடம் கேட்டனர். பொறுமையாக இருந்திருந்தால் 8 மாதங்களில் இலங்கையில் மீதமாவது என்ன என்பது தொடர்பில் பிரச்சினையுள்ளது. அனைத்தையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் திட்டத்தில் அரசாங்கம் இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.