சந்திரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு!
09 Nov,2018
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின் மத்தியில் சந்திரிகா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கட்சி உருவாக்கத்துக்காக சிறிலங்காவின் முன்னணி விளையாட்டு வீரர்கள் சிலருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பிலிருந்து வெளியேறி நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அவர் தலைமையில் சீரமைப்பதற்கு சந்திரிகா ஒத்தாசை புரிந்துள்ளார்.
எனினும் தற்போது மைத்திரிபால சிறிசேன மீண்டும் மஹிந்த ராஜாக்ஷ அணியினருடன் கைகோர்த்துள்ள நிலையில் சந்திரிகாவின் பரம்பரைக் கட்சி தொடர்பில் அவர் கவலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் நாள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் சந்திரிகா பொதுவெளியில் எதுவுமே கூறாது இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தினத்தில் கலந்துகொண்டுள்ளார் சந்திரிகா.
இதன் பின்னணிய்லேயே புதிய தேசியக்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.