மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் மக்களுக்கு ரணில் அழைப்பு
09 Nov,2018
கொழும்பு : ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு போதும் போராட்டத்தை கைவிடக் கூடாது என இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்படுவதாக அக்.,26 அன்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மகிந்தர ராஜபக்சே பிரதமராக தொடர்வார் என அறிவித்த சிறிசேனா, நவம்பர் 16 வரை இலங்கை பார்லி.,யை முடக்குவதாக அறிவித்தார். பின்னர் நவ.,14 ம் தேதி பார்லி., கூட்டப்பட உள்ளதாக அறிவித்தார். பார்லி., கூட்டம் துவங்குவதற்கு முன் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காண வேண்டும் என அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், அதிகார மாற்றம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் இந்த திடீர் முடிவை எதிர்த்து போராடி வருவதற்கு மக்களுக்கு எனது நன்றி. தற்போது வரை கடந்த 13 நாட்களாக இலங்கையின் ஜனநாயகம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கருப்பு நேரம். மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.