வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்சமைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
09 Nov,2018
வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் படிப்படியாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வீடமைப்பு அமைச்சானது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவிடம் இருந்தமை குறிப்பிடத்தக்கது