வடக்கு – தெற்கு மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் தீர்க்கவில்லை – முரளி குற்றச்சாட்டு
07 Nov,2018
வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் பூர்த்தி செய்யவில்லை என இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் நேற்றுமுத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கை மக்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து ஜனநாயகம் மட்டுமன்றி உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் எதிர்பார்க்கின்றனர்.
அரசியல்வாதிகள் தெற்கிலும், வடக்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யவில்லை.
குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகத்தையும் பழைய விடயங்களையும் பற்றி பேசுகின்றனரே தவிர மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசுவதே இல்லை என்று முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டினார்.