சிறிசேன பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச
07 Nov,2018
ஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
எனினும்; கொள்கை அடிப்படையில் சிறிசேனவின் இந்த வேண்டுகோளை நான் நிராகரித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பயந்து இதனை நிராகரிக்கவில்லை மாறாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது கொள்கை அடிப்படையில் சிறந்த விடயமல்ல என நான்க கருதினேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கா ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படவேண்டும் என்பதே அவ்வேளை எனது நோக்கமாகயிருந்தது எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி சிறிசேன தான் சஜித்பிரேமதாசவிற்கும் கருஜெயசூரியவிற்கும் பிரதமர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் எனினும் இருவரும் ரணில் விக்கிரமசிங்க மீதான அச்சம் காரணமாக அதனை ஏற்க மறுத்தனர் என குறிப்பிட்டிருந்தார்.