தமிழ் பேசும் மக்களிடம் தமிழில் முக்கிய கோரிக்கை விடுத்த மஹிந்த
05 Nov,2018
என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள், நான் உங்களை நம்புகின்றேன், நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும், இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அரச ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.
அபிவிருத்திக்காவும் மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.
நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நான் ஜனாதிபதியின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன். நாம் ஒன்றிணைந்தது நாட்டு நலன்கருதியே.
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிள்ளைகளின் உரிமையை விற்க ஆயத்தமானார்.
அனைத்திற்கும் வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் என தெரிவித்துள்ளார்.