மஹிந்தவுக்கு குடும்பத்தோடு சென்று வாழ்த்துத் தெரிவித்த கருணா..
04 Nov,2018
விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்து பின்னர் அந்த அமைப்பை பிளவுபடுத்தினவரும், கருணா , பிரதமர் மஹிந்த ராஜபக்சவை குடும்ப சகிதம் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.
இதில் கருணா, அவரது மனைவியும், மகனும் கலந்துகொண்டிருந்தனர். மட்டக்களப்பிலிருந்து இன்று அதிகாலை விரைந்த கருணா, விசேட அழைப்பின் பேரில் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.