நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும் – ஐ.தே.க எச்சரிக்கை!
03 Nov,2018
எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளவில்லை.
வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில் சதித்திட்டம் இருப்பதாகவே எமக்கு தோன்றுகின்றது.
மக்களுடன் இணைந்து நாம் நாடாளுமன்றத்தை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் ஏதாவது தவறு இடம்பெற்றால் அதற்கு நாடாளுமன்றத்தை பிற்போடும் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.