தமிழர்கள் காணாமல் போன விவகாரத்தில், இலங்கை ராணுவ தளபதியை கைது
02 Nov,2018
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்தபோது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். அவர்களில் 11 தமிழ் வாலிபர்கள் காணாமல் போனது தொடர்பான வழக்கு, கொழும்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வாலிபர்கள் கடத்திக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இதில் தொடர்புடைய கடற்படை அதிகாரிகள் பலர் ஜாமீனில் உள்ளனர். அப்போதைய கடற்படை அதிகாரியும், தற்போதைய ராணுவ தளபதியுமான ரவி விஜேகுணரத்னே, முக்கிய குற்றவாளியை வெளிநாட்டுக்கு தப்பிஓட உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே, ரவி விஜேகுணரத்னேவை கைது செய்யுமாறு போலீசாருக்கு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. 9-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த தவறினால், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.