ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிரடி திட்டம்!
02 Nov,2018
ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆதரவு வழங்கி புதிய அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை பெற எதிர்ப்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இவருடன் மேலும் சில ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மூவரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மகிந்த ராஜபக்ஸவின் புதிய அமைச்சரவைக்கு ஆதரவு வழங்க உடன்பட்டுள்ளதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்
2 மில்லியன் டொலரும், அமைச்சு பதவியும்; கூட்டமைப்புக்கு கொட்டும் காசு மழை!
சிறிலங்கா புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றதை அடுத்து அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் கட்சித் தாவல்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணமுள்ளன.
இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அரங்கேற்றியுள்ள மைத்திரி மஹிந்தா அணியுடன் இணைந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பணமும் அரசாங்கத்தில் முக்கிய பதவி ஒன்றும் வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
இதற்கமையவே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் கட்சி தாவியிருப்பதாகவும் ஐக்கியதேசியக் கட்சியின் மூத்ததலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
மைத்திரி மஹிந்த அணிக்கு தற்போது 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கின்றது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் போட்டியிட்டுத் தெரிவான 95 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவினதும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, வசந்தசேனா நாயக், ஆனந்த அலுத் கமகே மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு இன்னமும் 13 பேரினது ஆதரவு தேவைப்படுகின்றது. இதேவேளை சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கமைய தானே பிரதமர் எனக் கூறிக்கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 102 நாடளுமன்ற உறுப்பினர்களது அதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2015 ஆகஸ் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். இவர்களில் சபா நாயகராக கரு ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டதையடுத்து 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பட்டியலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரது ஆதவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கின்றது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் தேர்வான 4 உறுப்பினர்கள் மஹிந்த மைத்திரி அணிக்குத் தாவியுள்ளதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் 102 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர்.
இதேவேள இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 6பேரும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் ஜே.வி.பி கட்சியானது மஹிந்த மைத்திரி கூட்டணிக்கோ ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணிக்கோ ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லையென திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கப்போகின்றோம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஒரு முடிவை எடுப்பதாக கூட்டமைப்பின் தலைமை அறிவித்திருக்கின்றது.
இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரி மகிந்த அணியினர் தமக்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியிருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தமது அணியில் இணைந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்றும் அதற்கு மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்க மைத்திரி மஹிந்த அணி முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பின்னணியில் யார் யார் இந்த விலைகளுக்கு விற்கப்படபோகின்றனர் என்பது குறித்த தகவல்கள் அடுத்துவரும் தினங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடுமென்று கொழும்பிலுள்ள அரசியல் விமர்சகர்கள் அறிவித்துள்ளனர்
று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்தவின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்த சம்மந்தன்; பரபரப்பு தகவல்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் இரா சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பிரதமர் யார் என்ற சர்ச்சை நிலையில், கூட்டமைப்பின் அணுகுமுறைகள் எவ்வாறு என்பது தொடர்பில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு விசேட செவ்வி அளித்துள்ளார்.
அதில் அரசியல் சாசனத்திற்கு அமைய நாட்டு மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட செயற்பாடுகள் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன் பிரதமர் மஹிந்தவிடம் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம், அவரின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம் என குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்