பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்ணான்டோ!
30 Oct,2018
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமசிறி பெர்ணான்டோ, சிறந்த நிர்வாகத் துறை நிபுணராவார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் தபாற்துறை அமைச்சின் செயலாளராகவும் ஹேமசிறி பெர்ணான்டோ பணியாற்றியுள்ளார்.
மேலும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் ஶ்ரீ லங்கா டெலிகொம் ஆகியவற்றின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.