அதிபரை விட பிரதமருக்கே அதிகாரம் அதிகம்: பதவியேற்ற உடனே வேலையை காண்பிக்கும் ராஜபக்சே
27 Oct,2018
இலங்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று திடீரென அந்நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். இது இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அதிபர் சிறிசேனா தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன
இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்று முழுதாக ஒருநாள் கூட முடியாத நிலையில் 'இலங்கையில் திருத்தி அமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தின்படி அதிபரை விட பிரதமருக்கே அதிக அதிகாரம் இருப்பதாக பேட்டி ஒன்றில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது அதிபர் சிறிசேனாவுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
எனவே வெகுவிரைவில் அதிபர் சிறிசேனாவைவின் ஆட்சியை ராஜபக்சே கவிழ்ப்பார் என்றும், இலங்கையின் முக்கிய முடிவுகளை ராஜபக்சேவே எடுப்பார் என்றும் கூறப்படுவதால் இலங்கை மக்கள் குறிப்பாக இலங்கை தமிழர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.