மைத்திரி தனது சுஜ நல அரசியல் நோக்கத்துடன் கரு நாகப் பொந்தினுள் கை வைத்து விட்ட்டார்
27 Oct,2018
மைத்திரி தனது சுஜ நல அரசியல் நோக்கத்துடன் கரு நாகப் பொந்தினுள் கை வைத்து விட்ட்டார் என தோன்றுகின்றது.
ஏற்கனவே ஒரு முறை, தான் பதவியில் இருப்பேன், என அறிவித்து பதவிக்கு வந்த அவருக்கு கிடைத்த பதவி சுகம் அவரை மீண்டும் ஜனாதிபதியாக விரும்ப வைத்துள்ளது.
ஐ தே க உடன் இருந்தால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் ஐ தேக ரணில் அல்லது தமது கட்சி ஆள் தான் போட்டி இடுவர் என சொல்லி விட்டனர்.
ஆகவே மைத்திரிக்கு உள்ள தெரிவு, மகிந்தவுடன் சேர்வதும், தான் சுதந்திர கட்சி சார்பில் போட்டி இட்டு மகிந்த செல்வாக்கில் ஜனாதிபதியாகுவதுமே.
இது அரசியல் ரீதியாக சிறந்த அணுகுமுறை தான், சநதேகமில்லை.
ஆனால்
மகிந்த முட்டாள் அல்ல. ஊரை அடித்து, உலையில் போட்ட ஆள் ....
இன்றுள்ள சட்ட படி மகிந்த மீண்டும் தேர்தலில் போட்டி இட முடியாது.
ஆனால் அதே அரசியல் அமைப்பின் இன்னுமொரு சட்டம் சொல்வது என்னெவெனில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி இறந்தால், எஞ்சி உள்ள அவரது பதவிக்காலத்தினை, நாட்டின் பிரதமர் ஜனாதிபதி ஆகி தொடர முடியும். பிரேமதாச இறக்க, விஜயதுங்க இவ்வாறே ஜனாதிபதி ஆனார்.
இதில் உள்ள சட்ட வியாக்கியானம் என்ன வென்றால்....மீண்டும் தேர்தலில் நிற்க முடியாது. ஆனால் போட்டி இன்றி (பிறிதொரு சட்டம் மூலம்) ஜனாதிபதி ஆக முடியும்.
இங்கே தான் மைத்திரி கணிப்பில் பிழை விட்டாரோ என தோன்றுகின்றது.
ஏற்கனவே, சேர்ந்து ஆப்பம் தின்று, மகிந்த முதுகில் குத்திய மைத்திரி, இன்று பதவியில் இருத்திய ரணில் முதுகில் குத்தி, பின்னர் மகிந்த தன்னை இன்னும் நம்புவார் என நினைப்பது பேதைமை.
கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில், திசாநாயக்க வீட்டில் சந்திப்பு என்று வந்த செய்தியில் மகிந்தவை பிரதமர் ஆக்கினால், அவர் போட்டி இடாமலே ஜனாதிபதி ஆவர் என ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் . பலர் அதன் அர்த்தம் புரிந்து பின்னூட்டம் போட்டிருந்தனர்.
எம்முடன் இருப்பதே ஜனாதிபதிக்கு பாதுகாப்பானது என ரணில் சில மாதங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தார். இந்திய ரோ கதையினை அவிட்டு விட்டு மைத்திரி பீதியை கிளப்பியது மகிந்த கோஸ்ட்டி.
இன்று ரோவுக்கும், அதன் போசகர் (patron ) மோடிக்கும், இந்தியாவுக்கும் பெப்பே காட்டி உள்ளார், மகிந்த. சீனா காரர்கள் கொடுப்புக்கில் சிரிப்பார்கள்.
பசில், அவசரப்படவேண்டாம்.... மக்கள் எம் பக்கம். தேர்தல் வரை பொறுப்போம். அமர்க்களமாக வென்று, மக்கள் ஆதரவுடன் ஆட்சியினை பிடிப்போம் என்று எவ்வளோவோ சொல்லியும் மகிந்தவின் பதவி ஆசை வென்று உள்ளது என்றால், ஜனாதிபதி ஆக, என்ன வேண்டுமானாலும் செய்வார் அவர்.
மைத்திரி நிம்மதியை தொலைத்து விட்டார் இன்றுடன்.
மறுபுறம்.... ரணில் மீதான அன்பினால், மென்மையான போக்கினைக் காட்டிய மேலை நாடுகள், மகிந்த குறுக்கு வழியில் வந்ததால்......கடும் போக்கினக் காட்டுமே ?