சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் அரசியல் சாசனத்தினது 46வது சரத்தின் 2வது பிரிவு சொல்வது .....
27 Oct,2018
பயங்கரவாதக் கும்பல் முன்பைப் போலவே நீதித்துறையையும் நீதிமன்றையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், தாங்கள் கடத்தி கொலை செய்து கொள்ளையடித்த பண பலத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடிந்தால், போர்க்குற்றவாளி மகிந்த பிரதமராக தொடர்ந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத்தை மேலும் முன்னெடுக்கலாம்.
அதே நேரத்தில், மைத்திரி இறந்தால் அல்லது (மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாதக் கும்பலால்) கொலை செய்யப்பட்டால், மகிந்த சர்வ பலமுள்ள இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்க முடியும்.
மைத்திரி தனக்குத் தானே குழிபறித்துக் கொண்டாரா என்பது சில காலத்தில் விளங்கும்.
பக்கசார்பற்ற முறையில் நாளை அறிவிப்பேன் – சபாநாயகர் அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும். அது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின் படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பக்கசார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமராக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால் ....
அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வரையரை செய்துள்ளது.
ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது.
UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும்.
கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது.
இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.
3 முக்கிய சிறுபான்மை கட்சிகள் மந்திர ஆலோசனையில்! முடிவு விரைவில்...
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 3 முக்கிய கட்சிகள் முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து எவ்வாறு முங்கொடுப்பது தொடர்பான பேச்சில் 3 கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 5 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 7 உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தனர்.
இந் நிலையில் அமைச்சர் மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்