முன்னாள் பிரதிக் காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்ஸ
25 Oct,2018
ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய முன்னாள் பிரதிக் காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றும் முன்னிலையாகிய சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்டவரை இன்று இரவே கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தி விளக்க மறியலில் வைக்கப்பட்டள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.