சிறைச்சாலை பேருந்து மோதியதில் இருவர் பலி : நால்வர் காயம்
24 Oct,2018
மஹவ, பலகொல்லகம பகுதியில் மஹவ சிறைச்சாலை பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8 மணியளவில் அநுராதபுரத்தில் இருந்து வாரியபொல நோக்கி பயணித்த சிறைச்சாலை பேருந்தும் எதிர்திசையில் பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் வேனின் ஓட்டுனர் மற்றும் வேனில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வேனில் பயணித்த நால்வர் காயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.