ஜனாதிபதி சீனாவுக்கும், பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்!
14 Oct,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
பிரதமர் ரணில், தனது தனிப்பட்ட விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருப்பினும் இப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை, ரணில் சந்திப்பார் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை போலந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரி, அங்கிருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனால் எதிர்வரும் 5ஆம் திகதி வரவு– செலவு திட்ட உரையின்போது நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்படும்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால, வெளிநாடுகளுக்கு அதிகளவான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு மக்களின் பணத்தை வீண்விரயமாக்குவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.