ஜனாதிபதி வேட்பாளராக பஷில்
09 Oct,2018
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது தெரிவு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவே என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன பகுதியில் டி.ஏ ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண மோசடி வழக்கு தொடர்பில், இன்று நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையானார்.
இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கிலே, மஹிந்த ராஜபக்ஷ தன்னை புறக்கணிப்பதாக சிலர் தகவல் வெளியிடுகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து வேட்பாளராக எவரை நிறுத்துவது என மஹிந்த ராஜபக்ஷ இன்னும் தீர்மானிக்கவில்லை.
தன்னை வினவினால், தாம் பெசில் ராஜபக்ஷவையே பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் பிறர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டு, எந்த வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ளாதுள்ளது.
இவ்வாறான அரசாங்கத்தை தகர்தெறிய வேண்டும்.
எமது அடுத்த கட்டம் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து வீழ்த்துவதே எனவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.