புலம்பெயர் தமிழர்களிடமுள்ள நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு
09 Oct,2018
புலம்பெயர் தமிழர்களிடமுள்ள நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பை யுத்தகளத்தில் தோற்கடித்த போதிலும் அவ்வமைப்பு பொருளாதார ரீதியில் பலமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களின் பலத்தைக் காண்பிப்பதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளமையானது நாட்டுக்கு பாதாகமாக அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தங்களின் நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
அவர்களுக்கு லண்டன் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட ஏராளமான நிறுவனங்களும் உள்ளன. எனவே தற்போதைய நிலையில் இலங்கையில் பொருளாதார மத்திய நிலைய வேலைத்திட்டங்களில் அவர்களின் பலத்தைக் காண்பிப்பதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுபேறு நாட்டுக்கு பாதாகமாக அமையும் என்றார்.