ஐரோப்பிய நாட்டிலிருந்து ஸ்ரீலங்கா வந்த பெண் சுட்டுக்கொலைஸ
02 Oct,2018
பாதாள உலக தலைவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த பெண் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏன் ரசிகா ரோயல் என்ற 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் உயிரிழந்த பெண்ணினால் ஆரம்பிக்கப்படவிருந்த புதிய பாலர் பாடசாலைக்கு பெயர் பலகை கொண்டுசெல்வதற்காக தனது 9 வயதுடைய மகளை தனது மோட்டார் வாகனத்தில் ஜஎலயில் இருந்து நீர்கொழும்பு நோக்கி அழைத்து சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த ரசிகா பல காலங்களாக தனது கணவருடன் இத்தாலியில் தொழில் செய்து வந்துள்ளார்.
அவரது கணவர் இன்னமும் இத்தாலியில் தொழில் செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
மிகவும் அன்பான இந்த பெண்ணின் மூத்த மகனுக்கு 12 வயதாகின்ற நிலையில் மகளுக்கு 9 வயதாகின்றது.
அவர் அயலவர்களின் மனதை வென்ற ஒரு பெண் எனவும், பிள்ளைகளுக்கு சிறந்த தாய் எனவும் கணவருக்கு அன்பான மனைவி எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது வாகனத்தில் அவரது 9 வயது மகள் இருந்ததாகவும், அவர் அந்த சம்பவத்தினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதிர்ச்சியில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது