மட்டக்களப்பில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு
19 Sep,2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பொலிஸ் பிரிவுகளிலிருந்து இன்று புதன்கிழமை ஆணினதும் பெண்ணினதும் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவின் மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீனவத் தொழில் புரியும் பிரம்மச்சாரியான சதாசிவம் சிவரஞ்சன் (வயது 36) என்பரின் சடலம் மீட்கப்பட்டு நாவற்குடா பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் அது குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவு வந்தாறுமூலை மேற்கு கிராம சேவகர் பிரிவின் எல்லை வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து புதன்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பிள்ளையின் தாயான தம்பிப்பிள்ளை சிவக்கொழுந்து (வயது 61) என்றே குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.