இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் தொகையை அறிவித்தார் மஹிந்த
12 Sep,2018
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் டெல்லியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
அத்துடன் நாங்கள் ஒருபோதும் இனவாத யுத்தத்தை முன்னெடுக்கவில்லை. இரணுவ நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே அமைந்நதே தவிர தமிழ் சமூகத்துக்கு எதிராக இயங்கப்படவில்லை.
மேலும் ரஜீவ் காந்தி மற்றும் மேலும் பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவிருந்த இந்த பயங்கரவாத அமைப்பானது இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் அது அச்சுறுத்தலாக அமைந்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.