தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்
11 Sep,2018
நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.
அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை.
மனிதர்களால் சாப்பிட முடியாத- நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனினும் இந்த தரம்குறைந்த முந்திரிப் பருப்பு தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.