பிரதமருக்குரிய தகுதி ரணிலிடம் இல்லை-மகிந்த
11 Sep,2018
பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த மக்கள் பலம் ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பைக்கட்டுகளில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சுக்கு சொந்தமான வான் ஒன்றின் மூலமே குறித்த பால் பைக்கட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.