கொடிகாமத்தில் ஆயுதங்களுடன் பொலிஸ் ஜீப் கடத்தல்..!
11 Sep,2018
கொடிகாமம் பகுதியில் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த பொலிசாரின் வாகனத்தை சற்று முன் இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். தற்பொழுது, வாகனத்தை தேடி அப்பகுதியில் பொலிசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொடிகாமம் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிசாரின் வாகனமே கடத்தப்பட்டுள்ளது. பொலிசாரின் வாகனம் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென பொலிசார் மீது ஒரு அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர்.
வாகனத்திற்குள் பொலிசாரின் ஆயுதங்களும் இருந்துள்ளன.இதையடுத்து, யாழ்ப்பாணத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிசார் தென்மராட்சிக்குவ வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை வாகனம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து, இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது