இலங்கைக்கு இரண்டு ரோந்து படகுகளை வழங்கியது ஜப்பான்!
30 Aug,2018
ஜப்பானிய அரசாங்கத்தின் மானிய உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள 1.8 பில்லியன் யென் ( 2.6 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியிலான இரண்டு ரோந்துப் படகுகளும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று(புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுதந்திரமானதும் , திறந்ததும், ஸ்திரமானதும் மற்றும் சுபீட்சம் நிறைந்ததுமாக, இந்து – பசுபிக் சமுத்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இலங்கைக்கு இந்த கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ரோந்துப் படகுகளுக்கு எஸ்எல்சிஜிஎஸ் சமுத்திர ரக்ஷா மற்றும் எஸ்எல்சிஜிஎஸ் சாம ரக்ஷா என இலங்கை கடற்படை பெயர் சூட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.