மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதியின் கருத்து
22 Aug,2018
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை அந்த நாட்டிற்கு கையளிப்பதற்காக பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மீண்டும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.