பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம்
13 Aug,2018
பெண் கைதிகள் சிலர் வெலிகட சிறைச்சாலையின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இன்று காலை முதல் இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
10 பெண் கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.