வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் :
03 Aug,2018
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயகம், விடுதலை, அமைதியான ஒரு சூழ்நிலை, பயமின்றி வாழக்கூடிய ஒரு சமூகம், ஊடக சுதந்திரம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட்ட ஒரு நாடு போன்ற விடயங்களையே மக்கள் எதிர்பார்த்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவரை தகாத வார்த்தைகளால் ஏசுவதற்கு, எழுதுவதற்கு, ஜனாதிபதியை தேவையற்ற முறையில் சித்தரித்து காட்டும் அளவிற்கு நாட்டில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, வழங்ப்பட்டுள்ள சுதந்திரத்தை இல்லாது செய்யும் அளவிற்கு ஈடுபட வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
மனம்பிட்டியவில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்