போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் -48 ஆயிரத்து 129 பேர் கைது!
27 Jul,2018
போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும், உள்நாட்டில்
போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை காரணமாக வெளிநாட்டவர்கள் உட்பட 48 ஆயிரத்து 129 பேர், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும், உள்நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 வெளிநாட்டவர்களில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மாலைதீவுகள், பொலிவியா, மற்றும் ஜேர்மனி நாட்டவர்களும் அடங்குகின்றனர்.
மேலும் இதில், ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்ததாக 19 ஆயிரத்து 441 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சுமார் 173 கிலோ 319 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மிகுதி 28 ஆயிரத்து 688 பேர் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 2 ஆயிரத்து 975 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (வியாழக்கிழமை) இரவு, நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது