கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலை கண்டு அதிர்ச்சி
23 Jul,2018
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.2 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் 28, விமான நிலையத்தின் சுங்க பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையிலேயே இந்த பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் தீர்வை வரியற்ற கடையின் ஊழியர் ஒருவரினால் இந்த பார்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்க பிஸ்கட்களை புகையிலை சுற்றும் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்