வடக்கு முத­ல­மைச்சரை சந்­திக்­க விரும்பினேன். விக்­கி­னேஸ்­வரன் முடி­யாது என்று கூறி­விட்டார்!! 

14 Jul,2018
 

 
 
 
 
முன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த  கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மஹிந்த  தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள் பல­மாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.
அவரும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­கவே தெரி­கி­றது. இந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடப் போகின்­றா­ராயின் அவ­ரிடம்  தமிழ் பேசும் மக்­களின்  சார்பில் கேட்­க­ப்படவேண்­டிய பல கேள்­விகள் உள்­ளன.
அதன்­படி இவ்­வாரம்  கோத்­த­பாய ராஜ­பக் ஷவிடம் பல்­வேறு   கேள்­வி­க­ளுக்­கான பதிலைப் பெறு­வ­தற்­காக அவரை சந்­தித்தேன்.
எனக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த   குறிப்­பிட்ட கால­நே­ரத்தில் முடி­யு­மா­ன­வரை  தமிழ் பேசும் மக்­களின் சார்பில் அவ­ரிடம்  கேள்­வி­களை எழுப்­பினேன்.  அவர் எனது   கேள்­வி­க­ளுக்கு எவ்­வாறு பதி­ல­ளித்தார் என்­பதைப் பார்ப்போம்.
கேள்வி : இப்­போது என்ன செய்­து­கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?
பதில் : நான் இந்­நாட்­களில்  வியத்­மக  அமைப்­புடன்   இணைந்து  செயற்­பட்டு வரு­கின்றேன். தொழில்சார்  நிபு­ணர்­களே இந்த அமைப்பில் இருக்­கின்­றனர்.வர்த்­த­கர்கள்,  தொழில்­நி­பு­ணர்கள் எனப் பல்­வேறு தரப்­பினர் இந்த அமைப்பில் உள்­ளனர்.
நாட்டின்  தற்­போ­தைய பிரச்­சி­னைகள் தொடர்­பி­லேயே  இத­னூ­டாக   ஆராய்ந்து வரு­கின்றோம்.அத்­துடன் பல்­வேறு தரப்­பினர் வந்து எம்மை சந்­தித்து பேசு­கின்­றனர்.
கேள்வி : ஏன் இந்த அமைப்பின் ஊடாக   நீங்கள் செயற்­பட்டு வரு­கின்­றீர்கள்?
பதில் : என்னை சந்­திக்க வரு­கின்ற  தொழில்சார் நிபு­ணர்கள் ஒரு­வி­ட­யத்தை கூறு­கின்­றனர்.  அதா­வது  தற்­போது நாட்டின் முன்­னேற்­றத்­துக்­காக தொழில்சார் நிபு­ணர்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­ப­தாக   அவர்கள் என்­னிடம் குறை­கூ­றினர்.  நாட்டின் நிர்­வா­கத்தில் அவர்கள்   பங்­கெ­டுக்­காமல் இருக்­கின்­றனர். பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் இருக்­கின்­றனர் என்று கூறலாம். அதனால் இந்த அமைப்பை  ஆரம்பித்துச் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம்.
கேள்வி : எவ்­வா­றான பிரச்­சி­னை­களை அடை­யாளம் கண்­டுள்­ளீர்கள்?
பதில் : பொது­வாக   கல்­விப்­பி­ரச்­சினை இன்று பாரிய  பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது. அனைத்துப் பிரச்­சி­னைகளுக்கும் மூலா­தா­ர­மாக கல்­விப்­பி­ரச்­சி­னையே காணப்­ப­டு­கின்­றது.
பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப, தொழில்­வாய்ப்பை  உரு­வாக்க, வறு­மையைப் போக்க, கல்­வியே அவ­சி­ய­மாகும்.  ஆனால் இன்று கல்­வித்­து­றையில் பாரிய நெருக்­க­டிகள் காணப்­ப­டு­கின்­றன.
அதற்கு மேல­தி­க­மாக பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையும் காணப்­ப­டு­கின்­றது.பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.ஆசி­யா­வுக்­கான பய­ணத்­துடன் எமது பொரு­ளா­தாரம் நக­ராமல் இருக்­கி­றது.
கேள்வி : யுத்­தத்தை முடித்­ததில்  உங்­க­ளு­டைய மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பு இருந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.அந்த வகையில் தற்­போ­தைய  நாட்டின் நிலை­மையை எவ்­வாறு  பார்க்­கின்­றீர்கள்?
பதில் : 2005ஆம் ஆண்டு  மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வந்­ததும் யுத்­தமே  பாரிய சவா­லாக இருந்­தது. அது மஹிந்த ராஜ­பக் ஷ உரு­வாக்­கி­ய­தல்ல.  அது மஹிந்­த­வுக்கு கிடைத்­தது.
நாடு முன்­னே­று­வதில்  காணப்­பட்ட   மிகப்­பெ­ரிய தடை­யா­கவே  பயங்­க­ர­வாதம் காணப்­பட்­டது.  மக்கள் அச்­சத்­துடன்  வாழ்ந்­தனர். எனவே இந்த நிலைமை­யா­னது அன்று  மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு பாரிய சவா­லாக காணப்­பட்­டது.
எனவே இந்த நிலை­மையை முடிக்­க­வேண்டும் என்று நாம் கரு­தினோம். அந்த சந்­தர்ப்­பத்­திலும் கூட நாம் வர­லாற்­றி­லி­ருந்து பல பாடங்­களை படித்திருந்தோம்.சமா­தானப் பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வி­ய­டைந்த  அனு­ப­வமும் எமக்கு இருக்­கி­றது.
யுத்த நட­வ­டிக்­கைகள்   பின்­ன­டைவை சந்­தித்த  அனு­ப­வமும் எமக்கு இருந்­தது.   எனவே யுத்­தத்தை  முடிக்­க­வேண்­டிய தேவை மஹிந்­த­வுக்கு ஏற்பட்டது.
ஆனால் அவர் முதலில் அந்தத் தெரிவை செய்­ய­வில்லை. கடந்­த­கா­லத்தில் கசப்­பான அனு­ப­வங்கள் ஏற்­பட்டும்  கூட முதலில் பேச்­சு­வார்த்தை மூலமே பிரச்­சி­னையை முடிக்க எத்­த­னித்தார்.
நான் பேச்­சு­வார்த்­தைக்கு தயார்  பேச வாருங்கள் என்று  மஹிந்த ராஜ­பக் ஷ பகி­ரங்­க­மாகவே கூறினார்.ஆனால் ஜெனி­வாவில் நடை­பெற்ற முதல் பேச்சு­வார்த்­தையே  தோல்­வியில் முடி­வ­டைந்­தது.ஆனால் அப்­போது கூட  பிர­பா­கரன் பேச்­சு­வார்த்தை மூலம்   பிரச்­சி­னையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்­க­வில்லை.
கேள்வி : பிர­பா­க­ர­னுக்கு பேச்­சு­வார் த்தை மூலம்  பிரச்­சி­னையை தீர்க்கும் எண்ணம்  இருக்­க­வில்லை என்­பதை உறு­தி­யாக கூறு­கின்­றீர்­களா?
பதில் : பேச்­சு­வார்த்­தை­ மூலம் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான எண்ணம் பிர­பா­க­ர­னுக்கு இருந்­தி­ருந்தால் அவ­ருக்கு அதற்­கான பல சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன.
ஆனால் அவர் அதனை பயன்­ப­டுத்­த­வில்லை. 1987 ஆம் ஆண்டு இந்­தியா தலை­யிட்ட  சந்­தர்ப்பம் தான் சிறந்த சந்­தர்ப்பம்.அன்று கொண்­டு­வ­ரப்­பட்ட மாகா­ண­சபை முறை­மையை அதி­க­மான மக்கள் விரும்­ப­வில்லை. எதிர்த்­தனர்.
ஆனால்  அந்த முறைமை அன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது.அந்த சந்­தர்ப்­பத்­தையும் பிர­பா­கரன் வீணாக்­கி­விட்டார்.   அந்த சந்­தர்ப்­பத்தை அன்று அவர் நன்­றாக பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்பு அவ­ருக்கு கிடைத்­தி­ருக்கும்.
பின்னர்   நோர்­வேயின் தலை­யீட்­டுடன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட உடன்­ப­டிக்­கையும் தோல்­வி­ய­டைந்­தது. அவ்­வா­றான  அனு­ப­வங்கள்  இருந்தும் மஹிந்த ராஜ­பக் ஷ பேச்­சு­வார்த்­தைக்கு  சென்றார்.
ஆனால் அந்த முயற்­சியும் தோல்­வி­ய­டைந்­தது.  எனினும் அதன் பின்­னரும் மாவி­லாறு விவ­காரம் வரை நாங்கள்  பொறு­மை­யு­ட­னேயே இருந்தோம்.  அது­வரை இரா­ணுவ நட­வ­டிக்கை எதுவும் எடுக்­க­ப்படவில்லை.  மாவி­லாறு பிரச்­சினை வந்­த­போது நாம்  நெருக்­க­டி­யான கட்­டத்­திற்கு வந்­து­விட்­டதை  உணர்ந்தோம்.
அதன் பின்னர்  இந்த யுத்­தத்தை  முடிக்­க­வேண்டும் என நாம் தீர்­மா­னித்தோம். எனவே குறு­கிய காலத்தில் சரி­யான திட்­ட­மி­ட­லுடன் யுத்­தத்தை முடித்தோம்.
எனினும் சர்­வ­தேச சமூ­கமும்  தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்  புலம்­பெயர் மக்­களும்   ஒரு­வி­ட­யத்தை மறந்­து­விட்­டனர்.  அதா­வது யுத்­தத்தின் பின்னர்  மஹிந்த ராஜ­பக் ஷ வடக்கு, கிழக்­கிற்­காக  ஆற்­றிய  சேவையை   அவர்கள் மறந்­து­விட்­டனர்.  யுத்­தத்தின் பின்னர்   மஹிந்த  எடுத்த வேலைத்­திட்­டங்­க­ளுக்கு இந்த தரப்­பினர் ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. அவற்றை அங்­கீ­க­ரிக்­க­வில்லை, பேச­வு­மில்லை.
கேள்வி : என்ன திட்­டங்கள் அவை?
பதில் : 3 இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர்  அன்று நிர்க்­கதி நிலையில் இருந்­தனர்.   ஒரு பிரச்­சினை ஏற்­பட்­ட­வுடன் முன்­னு­ரிமை அளித்து   செய்­ய­வேண்­டிய வேலைத்­திட்­டங்­களை அடை­யாளம் காண­வேண்டும்.
அத­னையே மஹிந்த அன்று  செய்தார். முதலில் எதை செய்­வது?பின்னர் எதை  செய்­வது என்ற திட்டம் எம்­மி­ட­மி­ருந்­தது.  முதலில் செய்­ய­வேண்­டி­யதை பின்னர் செய்தால்  சிக்கல் ஏற்­படும்.
யுத்தம் முடிந்த பின்னர் வந்த  ஐந்து வரு­டங்­களில்   மஹிந்த  முக்­கி­ய­மான திட்­டங்­களை முன்­வைத்தார்.   முத­லா­வது விட­ய­மாக  3 இலட்சம் மக்­களை மீள் குடி­யேற்­ற­வேண்­டிய   தேவை இருந்­தது.
அடுத்­த­தாக   இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த புலி உறுப்­பி­னர்­களை  என்ன செய்­வது  என்ற  விடயம் இருந்­தது.  இவை   இரண்­டுமே   முதன்மை விட­யங்­க­ளாக  இருந்­தன.   இந்­நி­லையில் 3 இலட்சம் பேரை மீள்­கு­டி­யேற்­ற­வேண்­டு­மானால்  நிலக்­கண்­ணி­வெ­டி­களை  அகற்­ற­வேண்­டி­யி­ருந்­தது.
கேள்வி : இந்த கட்­டத்தில் உங்­களின் பங்­க­ளிப்பு எவ்­வாறு இருந்­தது? 
பதில் : அதி­க­மான நட­வ­டிக்­கை­களை  இரா­ணுவம் முன்­னெ­டுத்­தது.  அதன்­படி நாங்கள்  எமது இரா­ணு­வத்­தையும் பயன்­ப­டுத்தி  கண்­ணி­வெ­டி­களை  அகற்­றினோம்.  இரண்­டரை வரு­டங்­களில்  நிலக்­கண்ணி வெடி­களை அகற்­றினோம்.
இலங்கை இரா­ணு­வமே  70 வீத­மான கண்­ணி­வெ­டி­களை அகற்­றி­யது.  இன்று  யுத்­தக்­குற்றம்  பற்றி  பேசு­ப­வர்கள்  இரா­ணு­வத்தின் இந்த செய­லைக்­கு­றித்து  பேசு­வ­தில்லை. அடுத்­த­தாக 3 இலட்சம் மக்­களை    மீள்­கு­டி­யேற்­றினோம்.
அதன் பின்னர் மீள்­கு­டி­யேற்­றப்­ப­கு­தி­களில் அபி­வி­ருத்­தி­களை செய்தோம். உட்­கட்­ட­மைப்பு  வச­தி­களை மேற்­கொண்டோம். ரயில் பாதை­களை அமைத்தோம்.   மின்­சா­ரத்தை வழங்­கினோம்.  நீர்ப்­பா­ச­னத்­திட்­டங்­களை    அபி­வி­ருத்­தி­செய்தோம், குடி­நீர்த்­திட்­டத்தை மேற்­கொண்டோம்.
குறு­கிய ஐந்து வரு­டங்­க­ளி­லேயே இந்தத் திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். அதன்­பின்னர் கல்வி, சுகா­தாரம்,  போன்றத் துறை­களில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தினோம்.அதன்­பின்னர்  12 ஆயிரம் புலி உறுப்­பி­னர்கள் விட­யத்தில் என்ன செய்­வது  என்று ஆராய்ந்தோம்.  அவர்­க­ளுக்கு  முழு­மை­யான  புனர்­வாழ்­வுத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு தீர்­மா­னித்தோம்.   இதில் மஹிந்த ராஜ­பக் ஷ உறு­தி­யாக இருந்தார்.
கேள்வி : அந்த இடத்தில் உங்­க­ளுக்கு  வேறு­பட்ட கருத்து இருந்­ததா?
பதில் : இல்லை. இல்லை.  நாம்   மஹிந்த ராஜ­பக் ஷ   முன்­வைத்த  கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்டோம்.   முழு­மை­யான புனர்­வாழ்வு அளித்து போரா­ளி­களை சமூ­க­ம­யப்­ப­டுத்தும் திட்­டத்தை முன்­னெ­டுத்தோம்.எமது புனர்­வாழ்வு அளிக்கும் திட்டம் சிறந்த  வெற்­றி­யை­ய­ளித்­தது.சர்­வ­தே­சத்தின்  தொடர்பும் இதில் இருந்­தது.
முன்னாள்  போரா­ளி­களை சமூ­க­ம­யப்­ப­டுத்­தி­ய­போது அவர்­க­ளுக்­கான தொழில்­வாய்ப்பு பிரச்­சினை  ஏற்­பட்­டது. அப்­போது தனியார் துறையின் முத­லீ­டு­களை அங்கு கொண்டு சென்றோம்.அத்­துடன் சிவில் பாது­காப்பு சேவையில் முன்னாள் போரா­ளி­களை இணைத்­துக்­கொண்டோம்.
யாழ்­.கு­டா­நாட்டை 1998 ஆம் ஆண்டு அர­சாங்கம் மீட்­டது.  எனினும் அந்தப் பிர­தேசம் ஒரு பங்­கர் ­போன்றே காணப்­பட்­டது.  யுத்­தத்தின் பின்னர்  அனைத்து இடங்­களில் இருக்­கின்ற இரா­ணு­வத்­தி­னரை  முக்­கி­ய­மான இடங்­களைத் தவிர்த்து  குறைப்­ப­தற்கு   தீர்­மானம் எடுத்தோம்.
இன்று விடு­விக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ முகாம்கள் இந்த அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு  உட்­பட்­ட­வை­யல்ல.எமது அர­சாங்கம்   அன்று எடுத்த முடிவு.
தெல்­லிப்­பழை, கீரி­மலை, காங்­கே­சன்­துறை உள்­ளிட்ட  இடங்­களை நாங்கள் விடு­வித்தோம்.பலா­லிப் ­ப­கு­தியை மட்­டுமே எம்மால் விடு­விக்க முடி­யாமல் இருந்­தது.  அது  தொடர்­பிலும்  ஒரு  திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தது.
கொழும்­பி­லி­ருந்த பல்­வேறு மக்­களின் வீடுகள் யாழ்ப்­பா­ணத்தில் அவர்­க­ளிடம் மீண்டும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. அர்­ஜுன மகேந்­தி­ரனின் தந்­தையும் தனது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்த வீட்டை  என்­னிடம் வந்து கேட்டு விடு­வித்­துக்­கொண்டார்.
கொழும்பு முன்னாள் மேயர் கணே­ச­லிங்­கத்தின் பாரி­யாரும்   யாழில் உள்ள அவ­ரது இல்­லத்தைப் பெற்­றுக்­கொண்டார்.இப்­ப­டித்தான் நாம் சேவை­யாற்­றினோம்.
2015ஆம் ஆண்டு எமக்கு அதி­காரம் கிடைத்­தி­ருந்தால் நாம் அடுத்த பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்­தி­ருப்போம்.ஒரு கட்­டத்தில்  தீர்­வுத்­ திட்­ட­மா­கவே இந்த நாட்டில் மாகா­ண சபை முறைமை வந்­தது.
தெற்கின் அனைத்­துப்­ப­கு­தி­க­ளிலும் மாகா­ண­ சபை உரு­வாக்­கப்­பட்­டது. கிழக்கில் நாம் உரு­வாக்­கினோம். வடக்கில் மாகா­ண­ சபை இருக்­க­வில்லை.
வடக்கில்  முதன்­மு­தலில் மாகா­ண­ ச­பையை யார் அமைத்­தது?   மஹிந்த ராஜ­பக் ஷவே அதனை ஸ்தாபித்தார்.  அன்று  வடக்கு தேர்­தலை நடத்­தும்­போது அதில் நாம் தோல்­வி­ய­டைவோம் என  எமக்குத் தெரியும். அமைச்­ச­ர­வையில் பலர் அதனை  எதிர்த்­த­தாக  தகவல் இருக்­கி­றது.
ஆனால்  மஹிந்த ராஜ­பக் ஷ வட­மா­காண சபையை உரு­வாக்­க­ வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தார்.வடக்கு தேர்­தலை நடத்தும் முன்னர் அதனை சுதந்­தி­ர­மாக நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு என்­னிடம் கேட்­டுக்­கொண்டார்.
அதா­வது  இரா­ணுவம் மற்றும் பொலி­ஸாரை  தவிர வேறு யாரி­டமும்  ஆயுதம் இருக்­கக்­கூ­டாது என மஹிந்த ராஜ­பக் ஷ என்­னிடம் கூறினார்.அதன்­படி பல்­வேறு குழுக்­க­ளி­ட­மி­ருந்து நாங்கள் ஆயு­தங்­களை களைந்தோம்.
ஆனால் அவை தொடர்பில் சர்­வ­தே­சமோ தமிழ் அர­சி­யல்­வா­தி­களோ பேசு­வ­தில்லை. அவ்­வாறு  நாம் செய்­தி­ருக்­கா­விட்டால் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவுக்கு வாக்­குகள் கிடைத்­தி­ருக்­குமா?  வட­மா­கா­ண ­சபை எம்­முடன் இணைந்து செயற்­படும் என்று  நாம் அன்று எதிர்­பார்த்தோம்.
ஆனால் அது நடக்­க­வில்லை.எமக்கு எந்­த­வி­த­மான ஒத்­து­ழைப்­பையும் வழங்­க­வில்லை.வடக்கில்  அதி­க­ளவு  இரா­ணுவம் இருப்­பதால்  அங்கு இடம்­பெ­ற­வேண்­டிய செயற்­பா­டுகள் தொடர்பில் சம்­பந்­த­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­மாறு அப்­போ­தி­ருந்த இந்­தியத் தூதுவர் என்­னிடம் கேட்டார்.
நான் சரி­யென்று கூறினேன்.  அதன்­படி இந்­தியத் தூது­வரின் இல்­லத்தில்  இரண்டு மணி­நேரம்  சம்­பந்­த­னுடன் பேச்சு நடத்­தினேன்.
கேள்வி : எப்­போது இது நடந்­தது?
பதில் : வட­மா­கா­ண­ சபை உரு­வாக்­கப்­பட்­டதன் பின்னர் இது நடந்­தது.
கேள்வி : அதன்­போது சம்­பந்தன் என்ன கூறினார்?
பதில் : நாம் எவ்­வாறு  வடக்கை கட்­டி­யெ­ழுப்ப  உதவி செய்ய முடியும் என சம்­பந்­த­னிடம் கேட்டேன். எனினும் அந்த சந்­திப்பின் ஊடாக  எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை.
அதன்­பின்னர் வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை சந்­திக்­க­வேண்டும் என விக்­கி­னேஸ்­வ­ரனை நான் கேட்டேன்.
இரா­ணுவம் தொடர்­பான  சிக்­கல்­க­ளுக்கு தீர்­வு ­கா­ணவே  அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த கேட்டேன்.அந்தப் பேச்­சு­வார்த்­தைக்கு வடக்கு முதல்வர் இணங்­கினார்.
திக­தியும்  இடமும், நேரமும் ஒதுக்­கப்­பட்­டன.  எனினும்  அவரை சந்­திப்­ப­தற்கு  அரை­மணி நேரத்­திற்கு முன்னர் விக்­கி­னேஸ்­வரன் முடி­யாது என்று கூறி­விட்டார்.கூட்­ட­மைப்பின் உயர்­மட்­டத்­த­ரப்பின் கோரிக்­கைக்கு அமை­யவே அவர் அதனை மறுத்தார்.
கேள்வி : இவை­பற்றி அந்­த­நேரம் ஏன் வெளிப்­ப­டுத்­த­வில்லை?
பதில் : சில இடங்­களில் கூறினேன்.  ஆனால் இவற்றைக்  கூறித்­தி­ரி­வதில் அர்த்­த­மில்லை என எண்­ணினேன். எப்­ப­டியும் நாங்கள்  முன்­னு­ரிமை அளித்து மேற்­கு­றித்த வேலைத்­திட்­டங்­களை  செய்­யாமல் தீர்வு குறித்து  பேசி­யி­ருந்தால் இரண்­டுமே நடந்­தி­ருக்­காது.
அது­தொ­டர்பில்  நான்  நேர்­மை­யான முறையில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.    வடக்கு, கிழக்கில் மட்­டு­மின்றி 100அடிக்கு  இடையில்   சோத­னைச்­சா­வ­டிகள் காணப்­பட்­டன. வீதித்­த­டைகள்  இருந்­தன.2015ஆம் ஆண்டு நாம் நாட்டை பொறுப்பு கொடுக்­கும்­போது ஒரு சோத­னைச்­சா­வ­டியும் இருக்­க­வில்லை.
விஜ­ய­கலா பாலியல் வல்­லு­றவுகள்  இடம்­பெ­று­வ­தா­கவும் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.  எமது ஆட்­சி­க்கா­லத்தில் அவ்­வா­றான எந்த சிக்­கலும் இருக்­க­வில்லை.
யுத்தம் முடிந்த பின்னர் கடந்து சென்ற ஐந்து வரு­டங்கள் தொடர்பில் விஜ­ய­கலா பேச­வில்லை. அவர் 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியை பேசு­கின்றார்.  நாம் சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­டினோம்.
(தொடரும்…)
நேர்­கண்­டவர் : . அன்­டனி



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies