நீர்மூழ்கிகளால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! - பிரதமர் ரணில் எச்சரிக்கை
14 Jul,2018
நீர்முழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இவற்றை கருத்தில் கொண்டு கடல் பாதுபாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர கற்கை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீர்மூழ்கி கப்பல்களினால் ஏற்பட கூடிய அச்சுறுத்தல் குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக கடற்படை விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் தேவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகளை கண்காணிக்க ரோந்து படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பு தளமாக பயன்படுத்த சீனாவிற்கு சந்தர்ப்பம் கிடையாது.
மறுப்புறம் மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். எனவே சீனாவிற்கு தான் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என இனி யாராலும் குற்றம் சாட்ட முடியாது. எனவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தின் ஊடாக கூடிய பொருளாதார நிறைவு தன்மையை அடைய முடியும் என தெரிவித்தார்