விஜயகலாவின் உரையை சிங்களத்தில் மொழிபெயர்க்குமாறு நீதிவான் உத்தரவு!
13 Jul,2018
விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையை, சிங்களத்தில் மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திசாநாயக்க, அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி உரையைப் பதிவுசெய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதிவான் உத்தரவிட்டார்.