சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் விஜயகலா மீது நடவடிக்கை!
13 Jul,2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடயத்தில் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், அங்கு கருத்து வெளியிடுகையில்,
விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை பல ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அந்த உரைக்கு ஆதரவாகவும் அதே நேரம் எதிர்ப்பாகவும் வடக்கிலும் தெற்கிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவை தொடர்பில் விசாரணைகள் அல்லது நடவடிக்கைகள் என்பன தொடர்பில் சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலையே எங்களால் செயற்பட முடியும். இதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவை தொடர்பான அறிக்கையை அனுப்பியதன் பின்னரே இறுதி முடிவெடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.