முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் பாடம் கற்க வேண்டும் : அமைச்சர் மனோகணேசன்
11 Jul,2018
தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ், கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.