விஜயகலா வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்..
09 Jul,2018
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற முயன்றால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
விஜயகலா மகேஸ்வரன் வெளிநாடொன்றிற்கு செல்லவுள்ளார் என தங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் பிரச்சார செயலாளர் துசார திசநாயக்க, முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளிநாடு சென்றால் அது விசாரணைகளிற்கு இடையூறாக அமையும் என்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை விஜயகலா மகேஸ்வரனை, ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.