கோத்தாவின் தலைமையே நாட்டுக்குத் தேவை! - என்கிறார் கமல் குணரத்ன
08 Jul,2018
தெளிவான இலக்குடன், தீர்மானங்களை எடுக்கக்கூடிய தலைவர்களை நாடு தெரிவு செய்ய வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷவே, அதற்குத் தகுதியான நபர் என்று மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தெரிவித்துள்ளார்.
"ஹரி மக" (சரியான பாதை) அமைப்பு, கொலன்னாவையில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் நிறுவுநர் என்ற வகையில் தலைமை உரையாற்றுயில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ஷ, நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட "மஹிந்த சிந்தனை" செயற்றிட்டம், தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
புத்திஜீவிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கிலேயே, "வியத் மக" (அறிவு வழி) செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனவும் அவர் குறிப்பிட்டார். "வியத் மக" திட்டத்தை முன்னிறுத்தி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, நாட்டின் அபிவிருத்திப் பணிகளை திட்டமிடும் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.