வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம்
05 Jul,2018
கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளன என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்கந்தபுரம் பேருந்து தரிடப்பிடத்துக்கு எதிரிலும் கோயிலுக்கு அருகிலும் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழத்தின் வரைப்படம் என்பன வரையப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஜூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாக கடைப்பிடித்து வந்தது.
இதனை நினைவுகூரும் வகையில் இனந்தெரியாத சிலர் புலிகளின் சின்னத்தையும் ஈழ வரைப்படத்தையும் வரைந்துள்ளனர் எனக் கூறியுள்ளனர்.
சின்னத்தையும் ஈழ வரைப்படத்தையும் வரைந்தவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரவில்லை. இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.