வாகனங்கள் சோதனை – 2,322 பேர் கைது!!
28 Jun,2018
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர விசேட நடவடிக்கையில் 2,322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் 5,254 பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (26) இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி நேரம் மற்றும் இன்று அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட குறித்த விசேட நடவடிக்கையின் போதே குறித்த விடயங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறித்த நடவடிக்கையில் 1,796 வீதித் தடைகள் மேற்கொள்ளப்பட்டு 14,070 பொலிசார் அதில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விபரம்
மேற்கொள்ளப்பட்ட வீதித் தடை – 1,796
சோதனை மேற்கொள்ளப்பட்ட வாகனங்கள் – 29,090
சோதனையிடப்பட்ட நபர்கள் – 58,042
போதையில் வாகனம் செலுத்தியோர் கைது – 650
பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் கைது – 423
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது – 635
போக்குவரத்து வழக்குகள் – 5,254
சட்டவிரோதமாக ஆயுதங்கள் பறிமுதல் – 05
ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட கைது – 531
அனுமதிப்பத்திரம் இன்றி அரசாங்க மதுபானங்களை விற்றல், பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட விடயங்களில் கைது – 78
குற்றங்களை தடுத்தல் மற்றும் விபத்துகளை குறைப்பது தொடர்பிலும், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவும், நாடு முழுவதும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.