எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்றமாட்டோம்! - மஹிந்த அமரவீர
25 Jun,2018
நாங்கள் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீண்டும் யுத்தம் வரும் என்று சிலர் சொல்கிறார்கள், முகாம்களை அகற்றுகிறோம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம். இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவும் அகற்றவும் முழு சுதந்திரம் இராணுவத்தினருக்கு உண்டு. மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.