சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை
22 Jun,2018
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் சிறுத்தை ஒன்றை அடித்து கொலை செய்தவர்களைக் கைது செய்யவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று (வியாழக்கிழமை) அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்து சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் தாக்குதலையும் தாக்கியுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் அறிந்து வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சிறுத்தை பிடிக்க முயற்சிகள் செய்தபோதும் அது பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒருவர் உட்பட 10 பேரைச் சிறுத்தை மீண்டும் தாக்கியுள்ளது.
இந்நிலையில் அவ்விடத்தை விட்டு வனஜீவராசிகள் வெளியேறியதும் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சிறுத்தை மிகவும் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில் சிறுத்தை கொன்றவர்களின் கொடூரமான செயல் வெளிப்பட்டதையடுத்து பலர் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.