ஞானசார தேரர் பிணையில் விடுதலை
22 Jun,2018
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல ஹோமாகம நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர், பிரகீத் எக்னெலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் , அவரது வெளிநாட்டு செல்வதற்கும் நீதிமன்றத் தடை விதித்துள்ளது.
ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு ஒரே தடவையில் 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடு செலுத்துவதற்கும் தவறினால் மேலும் மூன்று மாத சிறைத் தண்டனையும், 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு கடந்த 14 திகதி ஹோமாகம பிரதான நீதவான் உதேஷ் ரணசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 6 மாதங்களில் நிறைவடையும் வகையில் அவருக்கான தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.