மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம்
08 Jun,2018
தரையிறக்கப்படுவதில்லை என ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஓய்வு பெற்ற பிரதம நிர்வாக அதிகாரி சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார் , அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற விமான நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் அதன் பங்காளியாகும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கடந்த ஆண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இயங்கிவந்த ஒரேயோரு சர்வதேச விமான சேவையான பிளை டுபாய் விமானச் சேவையும் தனது சேவையை இடைநிறுத்தியுள்ளது. வணிக ரீதியான காரணங்களுக்காக இன்று முதல் எதிர்வரும் நவம்பர் மாதம்வரை விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது