புலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது..
20 May,2018
தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒப்பீடு செய்ய முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்திட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியினர் பெரும் எண்ணிக்கையிலான அரசியல் படுகொலைகளை செய்துள்ள போதிலும், மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை எனவும், கூட்டுப் படுகொலைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சில தரப்பினர் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை வீர தீரச் செயல்களாக கருதுகின்ற போதிலும் அவர்கள் தொடர்பில் ஏனைய மக்கள் புத்திசாதூரியமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமே தவிர பதற்றமடையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்