பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்ஸ
20 May,2018
உலகில் மிக ஆபத்தான கடற்படை – விமானப் படைகளைக் கொண்ட புலிகளை, வெற்றிகொண்டோம்”
“சர்வதேசத்திற்கு இல்லாத தைரியத்துடன் அவர்கள் வியக்கும் வகையில் போரிட்டோம்”ஸ.
“உலகில் மிக ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர். அந்தப் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, சர்வதேசத்திற்கே இல்லாத தைரியத்துடன் போரிட்டோம். இந்தப் போராட்டத்தில் நாட்டு மக்கள் ஓர் அணியில் திரண்டு போருக்கு வலுச் சேர்த்தனர்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்தப் போரில் முப்படையினர், காவற்துறையினர், மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் என பல்லாயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்தனர். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்பட்டனர். நாட்டு மக்களின் சுதந்திரத்தையும், வாழும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரும் உயர்ந்த மானிதர்களே. எனினும் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும், இறுதிக் கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படும் குற்றம் சாட்டுக்களை ஏற்றுக் கொண்டு, அறிக்கைகளை வெளியிடுவது, மிக மோசமான காட்டிக் கொடுப்பும், வரலாற்றுத் துரோகமும் என சுட்டிக் காட்டியுள்ளார்.பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்ஸ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களும் நாட்டில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்ததுடன், வெள்ளை வான் கலாசாரத்தை கொண்டுவந்து ஊடகவியலாளர் பலரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்தனர் என அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில், மஹிந்தவும் அவரது உறவினர்களும் கொண்டுவந்த வெள்ளை வான் கலாச்சாரத்தின் ஊடாக, பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதால் உலகளாவிய ரீதியில் இருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட, மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி எனக் கருதப்படும், மகிந்தவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ பல மோசடிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அவை தொடர்பிலான வழக்கு விசாரணைகளில், அதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அன்று பல ஊழல்களில் ஈடுபட்ட மகிந்த சகோதரர்கள், தற்போது உள்ள ஆட்சியாளர்களை ஊழல் செய்வதாக விமர்சித்து வருவதுடன், கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவது வேடிக்கையான விடையம் எனவும், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.